தகுதி நீக்கம் தொடர்பாக பேரவைத் தலைவர் நோட்டீஸ்: உயர் நீதிமன்றத்தில் பைலட் வழக்கு

​சச்சின் பைலட் உள்ளிட்ட 19 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக மாநில பேரவைத் தலைவரின் நோட்டீஸுக்கு எதிராக சச்சின் பைலட் தரப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

சச்சின் பைலட் உள்ளிட்ட 19 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக மாநில பேரவைத் தலைவரின் நோட்டீஸுக்கு எதிராக சச்சின் பைலட் தரப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

ராஜஸ்தானில் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே பிரச்னை நிலவி வந்த நிலையில், கடந்த திங்கள் மற்றும் செவ்வாயன்று காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்கவில்லை. இதைத் தொடர்ந்து துணை முதல்வர் மற்றும் மாநிலத் தலைவர் பதவிகளிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.

மேலும், கட்சி கொறடா உத்தரவை மீறிய வகையில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று புகார் தெரிவித்தும், அவர்களை தகுதிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் ராஜஸ்தான் பேரவையில் காங்கிரஸ் தலைமை கொறடாவாக உள்ள மகேஷ் ஜோஷி, பேரவைத் தலைவர் சி.பி.ஜோஷிக்கு கடிதம் எழுதியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து, இந்தப் புகார் தொடர்பாக ஜூலை 17-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏ-க்களுக்கும் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியதாக பேரவைத் தலைவர் சி.பி.ஜோஷி புதன்கிழமை தெரிவித்தார்.

இந்த நிலையில், பேரவைத் தலைவரின் நோட்டீஸுக்கு எதிராக சச்சின் பைலட் தரப்பு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com