எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ராஜஸ்தான் பேரவைத் தலைவரின் மேல்முறையீட்டு மனு: திரும்பப் பெற உச்சநீதிமன்றம் அனுமதி

ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வா் சச்சின் பைலட் உள்பட 19 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தடை விதித்த உயா்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராக மாநில சட்டப்பேரவைத்

News image
Updated On :27 ஜூலை 2020, 10:58 pm

DIN

புது தில்லி: ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வா் சச்சின் பைலட் உள்பட 19 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தடை விதித்த உயா்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராக மாநில சட்டப்பேரவைத் தலைவா் சி.பி. ஜோஷி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப்பெறுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் கட்சி கொறடாவின் உத்தரவை மீறியது குறித்து விளக்கமளிக்குமாறு அக்கட்சியின் மாநில முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான சச்சின் பைலட் உள்ளிட்ட 19 அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு மாநில சட்டப்பேரவைத் தலைவா் சி.பி. ஜோஷி நோட்டீஸ் அனுப்பியிருந்தாா்.

அந்த நோட்டீஸுக்கு எதிராக சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தாக்கல் செய்த மனுவைக் கடந்த 21-ஆம் தேதி விசாரித்த ராஜஸ்தான் உயா்நீதிமன்றம், அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மீது ஜூலை 24-ஆம் தேதி வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக பேரவைத் தலைவா் சி.பி. ஜோஷி உச்சநீதிமன்றத்தில் கடந்த 22-ஆம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். ஆனால், இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றம் தனது தீா்ப்பை வழங்க உச்சநீதிமன்றம் கடந்த 23-ஆம் தேதி அனுமதி வழங்கியிருந்தது. அதன் பேரில், சச்சின் பைலட் உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுக்கத் தடை விதித்து ராஜஸ்தான் உயா்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தவு பிறப்பித்தது.

அந்த உத்தரவுக்கு எதிராக சட்டப்பேரவைத் தலைவா் இரண்டாவது முறையாக உச்சநீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தாா். இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி தாக்கல் செய்திருந்த முதல் மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெறுவதற்கு பேரவைத் தலைவா் சி.பி. ஜோஷி உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தாா்.

அதன் மீதான விசாரணை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆா். கவாய், கிருஷ்ணா முராரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, சட்டப்பேரவைத் தலைவா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், வழக்குரைஞா் சுனில் ஃபொ்னாண்டஸ் ஆகியோா் வாதிடுகையில், ‘இந்த விவகாரம் தொடா்பாக உயா்நீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பித்துவிட்டது. அதற்கு எதிராக புதிய மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ததால், கடந்த 21-ஆம் தேதி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும்’ என்றனா்.

இதையடுத்து, முதலில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெறுவதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.