தில்லி: 20 ஆயிரத்தைத் தாண்டியது பாதிப்பு, 500-ஐத் தாண்டியது பலி

தில்லியில் இன்று ஒரேநாளில் 990 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தில்லி: 20 ஆயிரத்தைத் தாண்டியது பாதிப்பு, 500-ஐத் தாண்டியது பலி


தில்லியில் இன்று ஒரேநாளில் 990 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அந்த மாநிலத்தில் புதிதாக 990 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 20,834 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 50 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது. இதில் 12 பேர் மட்டுமே கடந்த 24 மணி நேரத்தில் பலியானவர்கள்.

தில்லியில் இதுவரை 8,746 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய தேதியில் மொத்தம் 11,565 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தில்லியில் கடந்த வியாழக்கிழமை முதன்முதலாக ஒரேநாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்பு பதிவானது. இதன்பிறகு தொடர்ந்து மூன்று நாள்களாக 1000-க்கும் மேற்பட்ட பாதிப்பு பதிவாகி வந்த நிலையில், இன்று ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்பு பதிவாகியுள்ளது.

தில்லியில் கடந்த நாள்களாக கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை:

நாள்பாதிப்பு
மே 28, வியாழக்கிழமை1,024
மே 29, வெள்ளிக்கிழமை1,106
மே 30, சனிக்கிழமை1,163
மே 31, ஞாயிற்றுக்கிழமை1,295

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com