
மகாராஷ்டிரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 3,214 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், மாவட்டவாரியாக பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி அங்கு புதிதாக 3,214 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 48 மணி நேரத்தில் 75 பேர், அதற்கு முன்பு 173 பேர் என இன்றைய அறிவிப்பில் மொத்தம் 248 பேர் பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,39,010 ஆகவும், பலி எண்ணிக்கை 6,531 ஆகவும் உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 4.69 சதவிகிதமாக உள்ளது.
இன்று மட்டும் 1,925 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 69,631 பேர் குணமடைந்துள்ளனர். அங்கு குணமடைவோர் விகிதம் 50.09 சதவிகிதமாக உள்ளது.
இன்றைய தேதியில் 62,833 பேர் சிகிச்சையில் உள்ளனர். தற்போதைய நிலையில் 6,05,141 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 26,572 பேர் நிறுவனக் கண்காணிப்பிலும் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.