கரோனா தொற்று: கேரள, கர்நாடக மாநில நிலவரங்கள்

கேரளத்தில் புதிதாக 141 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 322 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் புதிதாக 141 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 322 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)

கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய இன்றைய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

கேரளம்:

கேரளத்தில் புதிதாக 141 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 60 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,451 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,620 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகம்:

கர்நாடகத்தில் புதிதாக 322 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 8 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 9,721 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 274 பேர் குணமடைந்ததையடுத்து, மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 6,004 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 3,563 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளவர்களில் 120 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com