புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

கொவைட் - 19 ஆய்வகக் கூடங்கள்

கரோனா வைரஸ் பாதிப்பு தென்படும் நிலையில் அதை எப்படி அணுகுவது? பரிசோதனைக் கூடங்கள் எங்கெங்கு உள்ளன? என்பதை அறியும் பொருட்டு நாடு முழுவதும் உள்ள பரிசோதனை ஆய்வகங்கள்

News image
Updated On :7 மார்ச் 2020, 2:57 pm

கரோனா வைரஸ் பாதிப்பு தென்படும் நிலையில் அதை எப்படி அணுகுவது? பரிசோதனைக் கூடங்கள் எங்கெங்கு உள்ளன? என்பதை அறியும் பொருட்டு நாடு முழுவதும் உள்ள பரிசோதனை ஆய்வகங்கள் குறித்த பட்டியலை இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்)மற்றும் சுகாதார ஆய்வுத்துறை ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளன. 

இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் மற்றும் சுகாதார ஆய்வுத் துறை ஆகியவை மத்திய சுகாதாரத் துறை மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் உள்ளன. சுவாச கோளாறுகள் அறிகுறிகள் ஏற்பட்டாலோ அல்லது அப்படி சிறுமங்களுக்கு உள்ளானவர்கள் வெளி ஊர்கள் அல்லது வெளிநாடுகளுக்கு பயணங்களைத் மேற்கொண்டிருந்தால் உடனே ஆய்வுகளுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படி சோதனைக்கு உள்ளாகும்போது, வாய்வழி மற்றும் நாசி துணிகள் ஆகிய மாதிரிகள் சேகரித்து நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவ மனைகள் மூலமாக ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த மருத்துவ மனைகளில் தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம், திருவாரூர், விழுப்புரம்,  திருநெல்வேலி, கோவை போன்ற அரசு மருத்துவ கல்லூரிகள், புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக் கழகம் உட்பட நாடுமுழுக்க உள்ள 56 மருத்துவக்கல்லூரிகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த மருத்துவ மனைகள் சந்தேகத்திற்குரிய மாதிரிகளை ஆய்வகங்களுக்கு அனுப்பும்.

தமிழகத்தில் சென்னை கிங்ஸ் முன்தடுப்பு மருத்துவம் மற்றும் ஆய்வு கழகம் மற்றும் புதுச்சேரி,  ஜவஹர்லால் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆய்வு கழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள 51 ஆய்வகங்கள் குறித்த பட்டியல்களையும் வெளியிடப்பட்டு அவைகளில் பரிசோதனைகள் மேற்கொள்ளவும் எத்தகைய சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன்(Real-time Polymerase Chain Reaction) ஆய்வை நிகழ்நேர அடிப்படையில் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.