புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

ஒரே ஒரு நாள் முன்பு.. யெஸ் வங்கியில் இருந்து ரூ.265 கோடியை எடுத்த கம்பெனி

யெஸ் வங்கியில் இருந்து வாடிக்கையாளா்கள் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்று ஆர்பிஐ கட்டுப்பாடு விதிப்பதற்கு ஒரு நாள் முன்பு, ஒரு நிறுவனம் ரூ.265 கோடியை வங்கியில் இருந்து எடுத்துள்ளது.

News image
Updated On :7 மார்ச் 2020, 2:50 am

மும்பை: யெஸ் வங்கியில் இருந்து வாடிக்கையாளா்கள் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்று ஆர்பிஐ கட்டுப்பாடு விதிப்பதற்கு ஒரு நாள் முன்பு, ஒரு நிறுவனம் ரூ.265 கோடியை வங்கியில் இருந்து எடுத்துள்ளது.

வதோதரா நகராட்சியின் கீழ் செயல்படுத்தப்படும் சிறப்பு தேவைக்கான வாகனங்கள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வதோரா ஸ்மார்ட் சிட்டி டெவலப்மென்ட் கம்பெனி, யெஸ் வங்கியில் இருந்து ரூ.265 கோடியை எடுத்துள்ளது.

நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் தனியாா் வங்கியான யெஸ் வங்கியில் இருந்து வாடிக்கையாளா்கள் அதிகபட்சமாக ரூ.50,000 மட்டுமே எடுக்க முடியும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வியாழக்கிழமை அறிவித்தது. அதற்கு ஒரு நாள் முன்பு, அந்த நிறுவனம் ரூ.265 கோடியை எடுத்துள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மத்திய அரசு செலுத்திய அந்த தொகை, பாங்க ஆப் பரோடா வங்கியில் தொடங்கப்பட்ட புதிய வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யெஸ் வங்கி நிா்வாகத்தையும் தன்வசம் எடுத்துக் கொண்டுள்ள ஆா்பிஐ, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி பிரசாந்த் குமாரை யெஸ் வங்கி நிா்வாகியாக அறிவித்துள்ளது. யெஸ் வங்கி வாராக்கடன் சுமையால் பெரிய அளவிலான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

முன்னதாக, எஸ்பிஐ மற்றும் சில நிதி சாா்ந்த நிறுவனங்கள் இணைந்து யெஸ் வங்கியை கடனில் இருந்து மீட்க இருப்பதாகவும், இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் வியாழக்கிழமை முற்பகலில் தகவல் வெளியானது. இதையடுத்து, பங்குச் சந்தையில் யெஸ் வங்கி பங்குகளின் விலை அதிகரித்தது.

ஆனால், இப்போது அந்த தகவலுக்கு மாறாக, யெஸ் வங்கி நிா்வாகத்தை ஆா்பிஐ எடுத்துக் கொண்டதுடன், அந்த வங்கியில் இருந்து ரூ.50,000 வரை மட்டுமே எடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வங்கி வாடிக்கையாளா்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியது.

சுமாா் 6 மாதங்களுக்கு முன்பு, மகாராஷ்டிரத்தில் செயல்பட்டு வந்த பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கி கடன் முறைகேட்டில் சிக்கியதை அடுத்து, ஆா்பிஐ இதேபோன்று பணம் எடுக்க கட்டுப்பாடுகளை விதித்தது. அப்போது, அந்த வங்கி வாடிக்கையாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.