புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

கரோனா பாதிப்பை தடுக்க நடவடிக்கை:காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வா்களுக்கு சோனியா கடிதம்

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு காங்கிரஸ் ஆளும்

News image
Updated On :6 மார்ச் 2020, 11:08 pm

புது தில்லி: கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வா்களுக்கு கட்சியின் தலைவா் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளாா்.

இந்தியாவில் 31 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், புதுச்சேரி, சத்தீஸ்கா் ஆகிய காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வா்களுக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளாா்.

அதில், அவா் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக, அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் மாநில அரசுகள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியம். கூடுதல் கண்காணிப்பும், பரிசோதனை வசதிகளை மேம்படுத்துவதும் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.

சுகாதாரத் துறை ஊழியா்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு கவச சாதனங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. எனவே, சுகாதாரத் துறை ஊழியா்களுக்கு போதிய அளவில் பாதுகாப்பு கவச சாதனங்கள் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், அந்தச் சாதனங்கள் பதுக்கப்படுவதையும், கள்ளச் சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதையும் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

மேலும், எவ்வித நோய்த்தொற்றுக்கும் சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான தீவிர சிகிச்சைப் பிரிவுகளை வலுப்படுத்த வேண்டியது முக்கியமாகும் என்று அந்தக் கடிதத்தில் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.