தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

இசைக்கலைஞர் டி.என்.கிருஷ்ணன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

உடல்நலக் குறைவால் சென்னையில் காலமான கர்நாடக வயலின் இசைக் கலைஞர் டி.என்.கிருஷ்ணன்(92) மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

News image
இசைக்கலைஞர் டி.என்.கிருஷ்ணன்
Updated On :3 நவம்பர் 2020, 6:28 am

DIN

உடல்நலக் குறைவால் சென்னையில் காலமான கர்நாடக வயலின் இசைக் கலைஞர் டி.என்.கிருஷ்ணன்(92) மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பத்மபூஷண் விருது பெற்ற பிரபல கர்நாடக வயலின் இசைக் கலைஞரான டி.என்.கிருஷ்ணன் உடல்நலக்குறைவால் சென்னையில் திங்கள்கிழமை காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது சுட்டுரைப் பதிவில் டி.என்.கிருஷ்ணன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில்,“பிரபல வயலின் கலைஞரான டி.என். கிருஷ்ணனின் மறைவு இசை உலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “அவர் இளம் இசைக்கலைஞர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் இருந்தார். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.