11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

முதல் வெற்றியை பதிவு செய்த ராஷ்ட்ரீய ஜனதா தளம்

பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி வேட்பாளர் லலித் குமார் யாதவ் வெற்றி பெற்றுள்ளார். 

News image

தேஜஸ்வி யாதவ்

Updated On :10 நவம்பர் 2020, 12:21 pm

பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சி வேட்பாளர் லலித் குமார் யாதவ் வெற்றி பெற்றுள்ளார். 

பிகார் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி(ஐக்கிய ஜனதா தளம்-பாஜக) 123 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது.

வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையம் முதல் தொகுதி முடிவை வெளியிட்டுள்ளது. அதன்படி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் லலித் குமார் யாதவ் தர்பங்கா(கிராமப்புறம்) பகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் 64,929 வாக்குகள் பெற்றுள்ளார். ஐக்கிய ஜனதா தளக் கட்சி வேட்பாளரை விட 2,141 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். 

பிகாரில் சுமார் 80 தொகுதிகளில் 1,000 வாக்குகளே வித்தியாசம் உள்ளதாக முன்னதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.