புது தில்லி: கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த 17 நாள்களாக 10 லட்சத்துக்கும் கீழ் உள்ளது. நாட்டில் தற்போது 9,02,425 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் கரோனா பரிசோதனை பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
நாள் ஒன்றுக்கு, 10 லட்சம் மக்கள் தொகைக்கு 140 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையை நிறைவேற்றும் வகையில் இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் செயல்படுகிறது.
மற்றொரு சாதனையாக 35 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு, 10 லட்சம் மக்கள் தொகைக்கான பரிசோதனையின் தேசிய சராசரி 865 ஆக உள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 12 லட்சம் (11,94,321)பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதனால் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 8.34 கோடியாக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 83,011 பேர் குணமடைந்த நிலையில், 78,524 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 58,27,704-ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களுக்கும், சிகிச்சை பெறுபவர்களுக்குமான இடைவெளி 49 லட்சத்தை (49,25,279) கடந்துவிட்டது.
கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த 17 நாள்களாக 10 லட்சத்துக்கும் கீழ் உள்ளது. நாட்டில் தற்போது 9,02,425 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குணமடைந்தோர் வீதம் 85.25%-மாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 78,524 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது, 971 பேர் உயிரிழந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு!

சைக்கிளில் விஜய்! துரத்திய ரசிகர்கள், பாதுகாவலர்கள்!

விஜய்யின் வருகை தோ்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: சிபிஎம் எம்.ஏ.பேபி
தவெக நிர்வாகி அஜிதா திமுகவில் இணைந்தார்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


