ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மகாராஷ்டிரத்தில் 12 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

மகாராஷ்டிரத்தில் புதிதாக 20,598 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :20 செப்டம்பர் 2020, 4:30 pm


மகாராஷ்டிரத்தில் புதிதாக 20,598 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 20,598 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12,08,642 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 455 பேர் பலியாகியுள்ளனர், 26,408 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 32,671 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 8,84,341 பேர் குணமடைந்துள்ளனர். 2,91,238 பேர் இன்னும் கரோனாவுக்கான சிக்ச்சையில் உள்ளனர்.

மும்பை:

மும்பையில் புதிதாக 2,236 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 5,038 பேர் குணமடைந்துள்ளனர், 44 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,84,313 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,47,807 பேர் குணமடைந்துள்ளனர், 8,466 பேர் பலியாகியுள்ளனர். இன்னும் 27,664 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.