ஸ்ரீநகர்: காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதன் காரணமாக மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையான இன்றும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு சீரடைந்த பின்னரே விமானங்களை இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என விமான நிலைய அதிகாரி ஒருவா் தெரிவித்தார்.
ஸ்ரீநகர் விமான நிலைய ஓடுபாதையில் உள்ள பனிப்பொழிவு தற்போது அகற்றப்பட்டுள்ளது. இருப்பினும் கடும் பனிப்பொழிவு காரணமாக விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்று இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை முழுவதும் கடும் பனிப்பொழிவு தொடர்ந்து நிலவி வருவதால் விமான நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த பனிப்பொழிவானது தொடர்ந்து புதன்கிழமை காலை வரை மிதமானது முதல் கடுமையான பனிப்பொழிவு நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காா் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

ரஷிய எண்ணெய்க் கப்பலை சிறைப்பிடித்த பிரிட்டன்!

துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இருவா் கைது

தனியாா் டிராக்டா் தயாரிப்பு நிறுவனம் முன் சுமை தூக்கும் தொழிலாளி தீக்குளிப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



