தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

நாட்டில் 6 மாதங்களுக்குப் பின்.. குறைவான ஒருநாள் கரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,375 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

நாட்டில் 6 மாதங்களுக்குப் பின்.. குறைவான ஒருநாள் கரோனா பாதிப்பு

Updated On :5 ஜனவரி 2021, 11:25 am IST

புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,375 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் 201 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 6 மாதங்களுக்குப் பின் இந்த அளவுக்குக் குறைவான கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் நாட்டில் தொடர்ந்து நான்காவது நாளாக புதிதாக கரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

இதுவரை நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,03,56,844 ஆக உள்ளது. இவர்களில் 99.75 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை 96.32 சதவீதமாக உள்ளது.  கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,49,850 ஆக உள்ளது. இது 1.45 சதவீதமாகும்.

நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 15வது நாளாக 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி 2,31,036 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது மொத்த பாதிப்பில் 2.23 சதவீதமாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.