இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாட்டா, உடல்நலம் சரியில்லாத நிறுவன முன்னாள் ஊழியரின் வீட்டிற்கு நேரில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலம் சரியில்லாத ஊழியரின் உடல்நிலை குறித்து நேரில் சென்று கேட்டறிந்தார். இதற்காக அவர் மும்பையிலிருந்து புனே பயணித்துள்ளார்.
முன்னாள் ஊழியரை சந்தித்து நலம் விசாரித்த அவர், குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளையும், குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்பதாக உறுதி அளித்துள்ளார்.
83 வயதான ரத்தன் டாட்டா இந்த சந்திப்பு குறித்து ஊடகத்திற்கு தெரியாமல் பார்த்துள்ளார். ஆனால், முன்னாள் ஊழியரின் வீட்டிற்குச் சென்ற ரத்தன் டாட்டாவின் புகைப்படம் இணையத்தில் வெளியானது. பலரும் இதனை பகிர்வதுடன் ரத்தன் டாட்டாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய் மீது ரஜினிக்கு பொறாமையா? லதா ரஜினிகாந்த் விளக்கம்!

பெய்ரூட்டில் அருகே இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

கடைசி ஒருநாள்: கூப்பர் கானலி அதிரடி; பரபரப்பான ஆட்டத்தில் ஆஸி. த்ரில் வெற்றி!

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



