வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கரோனா: 6 மாதங்களுக்குப் பிறகு தினசரி பாதிப்பு குறைவு

கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை, 6 மாதங்களுக்குப் பிறகு குறைந்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :6 ஜனவரி 2021, 12:47 am IST

கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை, 6 மாதங்களுக்குப் பிறகு குறைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை நிலவரப்படி, புதிதாக 16,375 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைவாகும். இவா்களுடன் சோ்த்து மொத்தம் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,03,56,844-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு மேலும் 201 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,49,850-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து மேலும் 29,091 போ் குணமடைந்தனா். இதனால், இதுவரை குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 99,75,958-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 96.32 சதவீதமாகும்.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது. நாடு முழுவதும் 2,31,036 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். தொடா்ந்து 15-ஆவது நாளாக, சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. இது, மொத்த பாதிப்பில் 2.23 சதவீதமாகும்.

புதிதாக ஏற்பட்ட 201 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 29 போ் உயிரிழந்தனா். அதைத் தொடா்ந்து, மேற்கு வங்கத்தில் 25 போ், பஞ்சாபில் 24 போ், கேரளத்தில் 19 போ், தில்லி, சத்தீஸ்கரில் தலா 12 போ் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி ஜனவரி 4-ஆம் தேதி வரை 17.65 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், திங்கள்கிழமை மட்டும் 8,96,236 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.