மேற்குவங்கத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்குவதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டார்.
மேற்கு வங்க மாநிலத்தில் கே.ஐ.எஃப்.எஃப். பன்னாட்டு திரைப்பட விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதனை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “மாநிலத்தில் தற்போது திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 100% இருக்கைகளுக்கு மாநில அரசின் சார்பில் அனுமதியளிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
மேலும் “மக்கள் முகக்கவசங்கள் அணிவதையும், கிருமிநாசினிகளைப் பயன்படுத்துவதையும் உறுதி செய்யுமாறு திரையரங்க உரிமையாளர்களைக் கேட்டுக் கொண்ட மம்தா பானர்ஜி ஒவ்வொரு காட்சிக்குப் பிறகும் திரையரங்கம் சுத்திகரிப்பு செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
மத்திய அரசின் அறிவுரையை கருத்தில்கொண்டு திரையரங்குகளில் நூறு சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட உத்தரவை தமிழக அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







