முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசுடன் நடைபெற்ற விவசாயிகளின் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடைந்துள்ளது.

News image

விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி

Updated On :8 ஜனவரி 2021, 5:37 pm IST

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசுடன் நடைபெற்ற விவசாயிகளின் 8-வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.

இதனையடுத்து வரும் 15-ஆம் தேதி அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஏற்கெனவே நடைபெற்ற 7 கட்ட பேச்சுவார்த்தையில் எந்த சமரச முடிவும் எட்டப்படாத நிலையில், இன்று (ஜன. 8) 8-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கிய இந்த பேச்சுவார்த்தையில் 40 விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தில்லி விஞ்ஞான் பவனில் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து வரும் 15-ஆம் தேதி 9-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய கிஷான் சபாவின் பொதுச்செயலாளர் ஹன்னா மோல்லா, ''மத்திய அரசுடன் காரசாரமான விவாதம் நடைபெற்றது. 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதைத் தவிர்த்து வேறு எதுவும் வேண்டாம் என்று பேச்சுவார்த்தையின்போது கூறினோம்.

3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும். திட்டமிட்டபடி ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு நாளில் டிராக்டர் பேரணி நடைபெறும்'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.