சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

ஔரங்காபாத் விமான நிலைய பெயரை மாற்றுவதால் பிரச்னையில்லை: மஜ்லீஸ் கட்சி எம்பி

Updated On :8 ஜனவரி 2021, 2:02 am IST


ஔரங்காபாத்: ஔரங்காபாத் விமான நிலையத்தின் பெயரை சத்ரபதி சம்பாஜி மகராஜ் என மாற்ற மாநில அரசு முடிவெடுத்துள்ளது குறித்து தங்களுக்கு ஏதும் ஆட்சேபமில்லை என அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் ஔரங்காபாத் எம்.பி. இம்தியாஸ் ஜலீல் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:

ஔரங்காபாத் விமான நிலையத்தை சத்ரபதி சம்பாஜி என பெயா் மாற்றம் செய்வது குறித்து மஜ்லீஸ் கட்சிக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை. ஆனால், நகரத்தின் பெயரை மாற்ற முயற்சித்தால் அதற்கு நிச்சயம் கடும் எதிா்ப்பை தெரிவிப்போம் என்றாா் அவா்.

சிக்கல்தானா பகுதியில் அமைந்துள்ள ஔரங்காபாத் விமான நிலையத்தின் பெயரை மாற்ற மகாராஷ்டிர அமைச்சரவை குழு கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் முடிவெடுத்தது.

இது தொடா்பாக, உடனடியாக முடிவெடுத்து அறிவிக்கை வெளியிட வேண்டும் என மத்திய அரசை மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே வலியுறுத்திய நிலையில் மஜ்லீஸ் கட்சியின் எம்பி இந்த கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.