திரிணாமுல் காங்கிரஸ் கரோனாவைவிட மிகவும் ஆபத்தானது என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேற்கு வங்க மாநிலம், நந்திகிராமத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், யரோ ஒருவர் என்னிடம் கேட்டார், 'தாதா! இந்த கரோனா எப்போது போகும் என்றார்?' அதற்கு, நான் மருத்துவர் கிடையாது, ஆனால் தடுப்பூசி வருவதால் அது போய்விடும் என்று சொன்னேன்.
ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கரோனாவை விட ஆபத்தானது, அவர்கள் எப்போது போவார்கள் என்று என்னால் சொல்ல முடியும். அவர்களுக்கான தடுப்பூசியை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். மே 20-க்குப் பிறகு இந்த வைரஸ் நிச்சயமாக வங்கத்திலிருந்து சென்றுவிடும்.
அத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் பெயரில் எந்த வைரஸும் இருக்காது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாள்கள் எண்ணப்படுகின்றன. 200 இடங்களை வென்று பாஜக புதிய ஆட்சியை அமைக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






