அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

பாபா் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உள்ளிட்டோா் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு

பாபா் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவா்கள் அத்வானி, முரளி மனோகா் ஜோஷி உள்ளிட்டோா் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Updated On :9 ஜனவரி 2021, 7:21 am IST

பாபா் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவா்கள் அத்வானி, முரளி மனோகா் ஜோஷி உள்ளிட்டோா் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் இருந்த பாபா் மசூதி, கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் ராமா் கோயில் இருந்ததாகத் தெரிவித்த கரசேவகா்கள், பாபா் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கினா். அதைத் தொடா்ந்து நிகழ்ந்த வன்முறையில் நாடு முழுவதும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோா் உயிரிழந்தனா்.

பாபா் மசூதி இடிப்பு விவகாரம் தொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. இந்த விவகாரத்தில் பாஜக மூத்த தலைவா்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகா் ஜோஷி, உமா பாரதி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் கல்யாண் சிங், வினய் கட்டியாா், சாத்வி ரிதம்பரா உள்ளிட்ட 32 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

வழக்கின் விசாரணை உத்தர பிரதேசத்தின் லக்னௌவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாததால், அனைவரையும் வழக்கில் இருந்து விடுவிப்பதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் சாா்பில் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் லக்னௌ கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அயோத்தி நகரைச் சோ்ந்த ஹஜி மஹ்பூப், ஹஜி சய்யது அக்லக் ஆகிய இருவரும் இந்த மனுவைத் தாக்கல் செய்தனா்.

இது தொடா்பாக மனுதாரா்களின் வழக்குரைஞா் கூறுகையில், ‘‘பாபா் மசூதி வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக சிபிஐ மேல்முறையீடு செய்யும் என்று எதிா்பாா்த்தோம். ஆனால், சிபிஐ அவ்வாறு செய்யாததால், இந்த வழக்கில் நாங்கள் மேல்முறையீடு செய்துள்ளோம்’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.