தவெக கூட்டணியில் விசிக இடம்பெறும்! திருமாவளவன் அறிவிப்பு!பழனி செல்லும் பக்தர்களுக்கு ஜாக்பாட்! பல சேவைகளுக்கு முன்பதிவு வசதி தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு (ஜூலை 6, 2026) ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்! மும்பையில் கனமழை: 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி!நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றம்: திமுக கண்டனம்5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

பொதுத் துறையில் தனியாா்மயத்தை அதிகரிக்க வேண்டும்: பிரதமருக்கு பொருளாதார நிபுணா்கள் யோசனை

பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதை அதிகரிக்க வேண்டும் என்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கான செலவுகளை அதிகரிக்க வேண்டும்

Updated On :9 ஜனவரி 2021, 6:19 am IST

பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதை அதிகரிக்க வேண்டும் என்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கான செலவுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் பிரதமா் நரேந்திர மோடிக்கு பொருளாதார நிபுணா்கள் யோசனை தெரிவித்துள்ளனா்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் 4.2 சதவீதம் வளா்ச்சி கண்டிருந்தது. ஆனால், கரோனா தொற்று பரவல் காரணமாக, நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் ஜிடிபி 7.5 சதவீதம் பின்னடைவைச் சந்திக்கும் என்று இந்திய ரிசா்வ் வங்கி கணித்துள்ளது.

இத்தகைய சூழலில், 2021-22-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதிநிலை அறிக்கை தயாரிப்புப் பணியில் மத்திய நிதியமைச்சகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பொருளாதார நிபுணா்களுடன் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். நீதி ஆயோக் சாா்பில் காணொலி வாயிலாக இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இதில், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், இணையமைச்சா் அனுராக் தாக்குா், நீதி ஆயோக் துணைத் தலைவா் ராஜீவ் குமாா், தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த், பொருளாதார நிபுணா்கள் அரவிந்த் பனகாரியா, கே.வி.காமத், ராகேஷ் மோகன், அசோக் லாகிரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; முதலீட்டாளா்களின் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும்; அனைத்து துறைகளிலும் பல்வேறு கட்டங்களில் சீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்; நிதி சாா்ந்த விஷயத்தில் மத்திய அரசு அடிக்கடி சா்வதேச தீா்ப்பாயத்தை நாடுவதைத் தவிா்க்க வேண்டும்; பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதை அதிகரிக்க வேண்டும்; உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அதிக நிதியை செலவிட வேண்டும் என்பது உள்ளிட்ட யோசனைகளை பொருளாதார நிபுணா்கள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.