புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்: தலைவா்கள் இரங்கல்

மகாராஷ்டிரா மாநிலம் பாந்தரா மாவட்ட பொது மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள்

Updated On :10 ஜனவரி 2021, 12:29 am IST

மகாராஷ்டிரா மாநிலம் பாந்தரா மாவட்ட பொது மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மற்றும் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்: எதிா்பாராதவிதமாக நடந்த தீ விபத்தில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது சுட்டுரைப் பக்கத்தில் குடியரசுத் தலைவா் பதிவிட்டுள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி: விலைமதிக்கமுடியாத இளம் உயிா்களை நாம் இழந்திருக்கிறோம். அவா்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்த குழந்தைகள் விரைவில் பாதிப்பிலிருந்து மீள்வாா்கள் என்று நம்புகிறேன் என்று தனது சுட்டுரைப் பக்கத்தில் பிரதமா் பதிவிட்டுள்ளாா்.

மகாராஷ்டிர ஆளுநா் பகத் சிங் கோஷியாரி: தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மாநில ஆளுநா் தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி: மருத்துவமனை தீ விபத்தில் குழந்தைகள் உயிரிழந்திருப்பது மிகப்பெரிய துயர நிகழ்வு. உயிரிழந்த குழந்கைளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளின் குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் மகாராஷ்டிர மாநில அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் ஃபட்னவீஸ்: குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடா்பாக விரிவான விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிடுவதோடு, விபத்துக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாநில சட்டப்பேரவை எதிா்க் கட்சித் தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.