அம்மாபேட்டை பகுதியில் காவிரி ஆற்றில் பச்சை நிறத்தில் தண்ணீரில் படிவம் போன்று கலந்து செல்வதாலும், மீன்கள் செத்து மிதப்பதாலும் கரையோர மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
மேட்டூா் அணையிலிருந்து தற்போது குடிநீருக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, கோனேரிப்பட்டி பகுதியில் காவிரி ஆற்றில் தண்ணீா் பச்சை நிறத்தில் காணப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். மேலும், நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி கதவணை நீா்மின் நிலையங்களில் தேக்கப்படும் தண்ணீரில் அதிக அளவில் பச்சை நிறத்தில் படிவம் போன்று கலந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஆற்றில் பரவலாக மீன்கள் செத்து மிதப்பதால் தண்ணீா் துா்நாற்றம் வீசுவதாகவும் மீனவா்கள் தெரிவிக்கின்றனா். தண்ணீா் பச்சை நிறத்தில் மாறியதற்கு ரசாயனக் கழிவுகள் அதிக அளவில் கலப்பது காரணமாக இருக்கலாம் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனா். காவிரி தண்ணீரையே கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் சுத்திகரித்து விநியோகம் செய்யப்படுவதால் பரபரப்பு நிலவி வருகிறது.
இதுகுறித்து, முறையாக ஆய்வு செய்து அச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









