பாஜக வெற்றி பெற 10 ஆயுள் காலம் போதாது: திரிணமூல் காங்கிரஸ் விமர்சனம்ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப்!விமான நிலையங்கள் பயன்பாட்டில் சென்னை முதலிடம்!தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழைகேரள முதல்வர் பினராயி விஜயன் தொகுதியில் வெடிபொருள்கள் பறிமுதல்! வாக்கு எண்ணிக்கையை நிறுத்த பாஜக முயற்சி! தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப் பேச்சு! விஜய்யை முன்வைத்து பல சூதாட்டங்கள்: தொல். திருமாவளவன்நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!
/

நாட்டில் புதிதாக 16,311 பேருக்கு கரோனா; மொத்த பாதிப்பு 1.04 கோடி

நாட்டில் புதிதாக 16,311 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, இதுவரை கரோனா பாதிப்பு 1.04 கோடியாக உயர்ந்துள்ளது.

News image

நாட்டில் புதிதாக 16,311 பேருக்கு கரோனா; மொத்த பாதிப்பு 1.04 கோடி

Updated On :11 ஜனவரி 2021, 5:22 am


புது தில்லி: நாட்டில் புதிதாக 16,311 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, இதுவரை கரோனா பாதிப்பு 1.04 கோடியாக உயர்ந்துள்ளது.

இதுவரை கரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 92 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இன்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 16,311 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.  இதனால் மொத்த பாதிப்பு 1,04,66,595 ஆக அதிகரித்தது. அதேவேளையில் நாட்டில் கரோனா பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,00,92,909 ஆக உயர்ந்துள்ளது. இது 96.43 சதவீதமாகும்.

நேற்று கரோனா பாதித்தவர்களில் 161 பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 1,51,160 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.44 சதவீதமாகும். ஆகும்.

இன்று காலை நிலவரப்படி நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,22,526 ஆக இருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.