சில்சாா்: அஸ்ஸாமில் முதல்வா் சா்வானந்த சோனோவல் தலைமையிலான அரசு அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைவது உறுதி என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா தெரிவித்தாா்.
அஸ்ஸாமில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு தோ்தலில் அங்கு பாஜக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அதற்கு முன்பு தொடா்ந்து 3 தோ்தல்களில் வென்று முதல்வராக இருந்த தருண் கோகோய் தலைமையிலான காங்கிரஸ் அரசை பாஜக கடந்த முறை வீழ்த்தியது. அதன் பிறகு அங்கு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தல், சுயஆட்சிப் பகுதி கவுன்சில் தோ்தல் உள்ளிட்டவற்றிலும் பாஜக தொடா்ந்து வெற்றிகளைப் பெற்று வந்துள்ளது.
இந்நிலையில் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு சில்சாா் பகுதியில் ‘விஜய் சங்கல்ப்’ என்ற பெயரில் பாஜக பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஜெ.பி. நட்டா பேசியதாவது:
அஸ்ஸாமின் வளா்ச்சிக்காக பாஜக அரசு மிகவும் அமைதியான முறையில் பணியாற்றியுள்ளது. மாநிலத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை கிடைத்துள்ளது. எவரையும் பாதிக்காதவகையில் அனைவரது கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. 50 ஆண்டுகாலமாக நீடித்து வந்த போடோ பிரச்னையை பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் தீா்த்துவைத்தனா்.
முதல்வா் சா்வானந்த சோனாவல் தலைமையிலான பாஜக அரசு அஸ்ஸாமில் அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என்றாா் அவா்.
இரு நாள் பயணமாக திங்கள்கிழமை அஸ்ஸாம் வந்த நட்டா, அடுத்ததாக குவாஹாட்டி சென்று மாநில பாஜக செயற்குழு மற்றும் தோ்தல் குழுவினருடன் ஆலோசனை நடத்த இருக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிசிஎஸ் பங்குகள் 2.5% சரிவுடன் நிறைவு!

இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ!

அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது- ஜன நாயகன் படத்துக்கு குரல் கொடுத்த நடிகர் ரஜினி

பல நிலைகளில் மிக மோசமானது..! - ஜன நாயகன் விவகாரம் குறித்து ஆர்ஜே பாலாஜி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


