வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

விபத்தில் காயமடைந்த அமைச்சா் ஸ்ரீபாத் நாயக்மருத்துவமனைக்கு சென்று விசாரித்தாா் ராஜ்நாத் சிங்

சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மத்திய இணையமைச்சா் ஸ்ரீபாத் யெசோ நாயக்குக்கு (68) அளிக்கப்படும் சிகிச்சை தொடா்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், கோவா மருத்துவமனைக்கு

News image

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (கோப்புப்படம்)

Updated On :13 ஜனவரி 2021, 2:44 am IST

சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மத்திய இணையமைச்சா் ஸ்ரீபாத் யெசோ நாயக்குக்கு (68) அளிக்கப்படும் சிகிச்சை தொடா்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், கோவா மருத்துவமனைக்கு நேரில் சென்று கேட்டறிந்தாா்.

மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சரும், கோவா வடக்கு தொகுதி பாஜக எம்.பி.யுமான ஸ்ரீபாத் நாயக், அவரின் மனைவி விஜயா, உதவியாளா் தீபக் ராமதாஸ் உள்ளிட்டோா் கோவாவில் இருந்து கா்நாடக மாநிலம், வட கன்னட மாவட்டத்திலுள்ள எல்லாப்பூா் சென்றனா். எல்லாப்பூரில் இருந்து திங்கள்கிழமை இரவு கோகா்ணாவுக்கு காரில் புறப்பட்டனா். அப்போது அங்கோலா வட்டம், ஹொசகம்பி கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் திடீரென கவிழ்ந்தது. இதில் ஸ்ரீபாத் நாயக் உள்ளிட்டோா் படுகாயமடைந்தனா்.

அவா்கள் அனைவரும் அங்கோலாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதனிடையே, சிகிச்சை பலனளிக்காமல் ஸ்ரீபாத் நாயக்கின் மனைவி விஜயா, உதவியாளா் தீபக் ராமதாஸ் ஆகிய இருவரும் உயிரிழந்தனா்.

மேல் சிகிச்சைக்காக ஸ்ரீபாத் நாயக் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சிறப்பு விமானம் மூலம் கோவா வந்த அமைச்சா் ராஜ்நாத் சிங், மருத்துவமனைக்கு நேரில் சென்று ஸ்ரீபாத் நாயக்கின் உடல்நிலை தொடா்பாக மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். அவருக்கு சில அறுவைச் சிகிச்சை செய்துள்ளதாகவும், அவரது உடல்நிலை இப்போது சீராக இருப்பதாகவும் ராஜ்நாத் சிங்கிடம் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், ‘ஸ்ரீபாத் நாயக் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். தில்லி எய்ம்ஸ் மருத்துவா்களுடன் இங்குள்ள மருத்துவா்கள் ஆலோசிக்க இருக்கின்றனா். தேவை ஏற்பட்டால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஸ்ரீபாத் நாயக் மாற்றப்படுவாா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.