வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

ஜம்மு-காஷ்மீரில் வாகனம் கவிழ்ந்ததில் 9 வீரர்கள் காயம்!

ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் சி.ஐ.எஸ்.எஃப் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 9 வீரர்கள் காயமடைந்தனர்.

News image

காயமடைந்த வீரர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது.

Updated On :29 ஜூன் 2026, 2:25 pm IST

ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் சி.ஐ.எஸ்.எஃப் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 9 வீரர்கள் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள கத்ரா அருகே திங்கள்கிழமை மத்திய தொழில் பாதுகாப்புப் படை வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 9 வீரர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதில், 3 பேர் படுகாயமடைந்தனர். சி.ஐ.எஸ்.எஃப் பணிக்காக தாராக்கோட்-பாலினி வழித்தடத்தில் ஒரு வளைவுப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வாகனம் திடீரென தலைகீழாகக் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வாகனத்தின் ஓட்டுநரும் காயமடைந்துள்ளார். ஒட்டுமொத்தமாக இந்த சம்பவத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த 3 வீரர்கள் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

லேசான காயமடைந்த மற்ற ஏழு பேர் கத்ரா சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஜம்மு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருபவர்களில், தலையில் பலத்த காயமடைந்த காவலர் ஷௌமி, தலைமைக் காவலர்கள் பி.கே. தித்ரியா மற்றும் எம்.எம். டே ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

துணை போலீஸ் ஐடிஜி ஷிவ் குமார் சர்மா மருத்துவமனைக்கு நேரில் சென்று, காயமடைந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

Summary

Nine Central Industrial Security Force (CISF) personnel were injured, three of them critically, when their vehicle overturned near Katra in Jammu and Kashmir's Reasi district on Monday, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.