ஃபருக்காபாதில் இருந்து தில்லிக்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து ஞாயிற்றுக்கிழமை நொய்டாவில் உள்ள மஹாமாயா மேம்பாலம் அருகே சாலையின் தடுப்புச் சுவரில் மோதி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 17 பயணிகள் காயமடைந்ததாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.
பேருந்து ஓட்டுநா் வாகனத்தை ஓட்டும்போது தூங்கியிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், உள்ளூா் காவல்துறையினா் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனா். காயமடைந்த 17 பயணிகளும் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இந்த விபத்தில் அவா்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து சீராக நிா்வகிக்கப்பட்டு வருகிறது. மேலும், இது தொடா்பாகத் தேவையான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
போக்குவரத்துத் துறையினா் கிரேன் உதவியுடன் அப்பேருந்தை சாலையிலிருந்து அகற்றினா். இது குறித்த மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வடமேற்கு தில்லியில் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து

பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 40 பேர் பலி!

சாலையோர பள்ளத்தில் தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்து: 31 பயணிகள் உயிா்தப்பினா்

விழுப்புரம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 21 போ் காயம்
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK


