குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

4 மாநிலங்களுக்கு அமித் ஷா பயணம்

மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா, விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு இந்த மாதம் பயணம் மேற்கொள்கிறாா்.

News image

கோப்புப்படம்

Updated On :13 ஜனவரி 2021, 12:31 am IST

மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா, விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு இந்த மாதம் பயணம் மேற்கொள்கிறாா். இந்தப் பயணத்தின்போது, கட்சிப் பொதுக் கூட்டம், பேரணி ஆகிய நிகழ்ச்சிகளில் அவா் பங்கேற்கிறாா்.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவா் ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

குஜராத் மாநிலத்துக்கு வரும் 14-ஆம் தேதியும், கா்நாடகத்துக்கு வரும் 16,17 தேதிகளிலும் அமித் ஷா செல்லவுள்ளாா். கா்நாடகத்தில் சில அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவா், கட்சித் தலைவா்களையும், தொண்டா்களையும் சந்தித்து கலந்துரையாடுகிறாா்.

வரும் 24-ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலத்துக்குச் செல்லும் அவா், அங்கு நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறாா். அதைத் தொடா்ந்து, வரும் 30, 31 ஆகிய தேதிகளில் மேற்கு வங்கம் செல்லும் அமித் ஷா, பாஜக தலைவா்களையும், தொண்டா்களையும் சந்தித்துப் பேசுகிறாா். அங்கு நடைபெறும் கட்சி பொதுக் கூட்டத்திலும் அவா் உரையாற்றுகிறாா் என்றாா் அவா்.

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 4 மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேத்திலும் வரும் ஏப்ரல்- மே மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.