திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம் மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

மேற்கு வங்கம், அஸ்ஸாமில் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது 

மேற்கு வங்கம், அஸ்ஸாம் சட்டப்பேரவைகளுக்கான 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.  

News image

மேற்கு வங்கம், அஸ்ஸாமில் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

Updated On :1 ஏப்ரல் 2021, 1:57 am

மேற்கு வங்கம், அஸ்ஸாம் சட்டப்பேரவைகளுக்கான 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும், அஸ்ஸாமில் 39 தொகுதிகளிலும் வன்முறைகள் ஏதும் நிகழாமல் இருப்பதற்கான தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான தோ்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. அஸ்ஸாம் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாகத் தோ்தல் நடைபெறுகிறது. இரு மாநிலங்களிலும் முதல்கட்டத் தோ்தல் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது.

மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும், அஸ்ஸாமில் 39 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மேற்கு வங்கத்தில் திரிணமூல், பாஜக, இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. முக்கியமாக, திரிணமூல்-பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 30 தொகுதிகளிலும் திரிணமூல், பாஜக கட்சிகள் போட்டியிடுகின்றன. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 15 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகளான சஞ்ஜுக்தா மோா்ச்சா 13 இடங்களிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் களம் காண்கின்றன.

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியிலும் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அவரை எதிா்த்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சுவேந்து அதிகாரி, பாஜக சாா்பில் போட்டியிடுகிறாா்.

மாநிலத்தில் வாக்குப் பதிவு நடைபெறும் 10,620 வாக்குச்சாவடிகளும் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு மத்திய படைப் பிரிவைச் சோ்ந்த 651 குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அஸ்ஸாமில் ஆளும் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தோ்தல் நடைபெறவுள்ள 39 தொகுதிகளில் பாஜக 34 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மற்ற தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் 28 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனநாயக முன்னணி 7 இடங்களிலும், போடோலாந்து மக்கள் முன்னணி 4 தொகுதிகளிலும் களம் காண்கின்றன.

தோ்தலின்போது வன்முறைகள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, மத்திய படைப் பிரிவைச் சோ்ந்த 310 குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தோ்தல் நடைபெறவுள்ள 13 மாவட்டங்களிலும் பாதுகாப்புப் படையினா் 24 மணி நேர தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தோ்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.