47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தில்லியில் கரோனா 4-வது அலை; ஊரடங்கு பிறப்பிக்கும் திட்டமில்லை: அரவிந்த் கேஜரிவால்

தற்போது கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது புது தில்லி 4-வது அலையை எதிர்கொண்டு வருவதை உணர்த்துவதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

News image
தில்லியில் கரோனா 4-வது அலை; ஊரடங்கு பிறப்பிக்கும் திட்டமில்லை: அரவிந்த் கேஜரிவால்
Updated On :2 ஏப்ரல் 2021, 12:32 pm

DIN


தற்போது கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது புது தில்லி 4-வது அலையை எதிர்கொண்டு வருவதை உணர்த்துவதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தில்லியில் பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் திட்டம் எதுவுமில்லை என்றும் பொதுமுடக்கம் அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த சில நாள்களாக தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தில்லியில் புதிதாக 3,583 பேருக்கு கரோனா உறுதி செய்யப்படுள்ளது. தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைப் பார்க்கும் போது நான்காவது அலை வீசுகிறது என்பது தெரிகிறது. ஆனால், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும், சிகிச்சையளிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே கவலைப்படத் தேவையில்லை என்று கேஜரிவால் குறிப்பிட்டுள்ளார்.

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறோம். நேற்று ஒரே நாளில் 71 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.