அசாம் மாநிலத்தில் பாஜக வேட்பாளரின் காரில் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில் தலைமை அதிகாரி உள்பட 4 பேரை தேர்தல் ஆணையம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
அசாம் மாநிலத்தில் 39 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.1) நடைபெற்றது.
வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களுக்கு பிறகு பதர்கண்டி தொகுதி பாஜக வேட்பாளர் கிருஷ்ணேந்து பால் என்பவர் காரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை எடுத்து செல்வது போன்ற ஒரு விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்ட 149-வது வாக்குச்சாவடி தலைமை அதிகாரி உள்பட மூன்று பேருக்கு நோட்டீஸ் அனுப்பி, தேர்தல் ஆணையம் அவர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்களின் முத்திரைகள் பிரிக்கப்படாமல் இருந்தாலும், 149-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் அம்மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு

உச்சம் தொட்ட எலுமிச்சை விலை

நெல்லையில் போலீஸாரை தாக்கியவருக்கு 15 மாதங்கள் சிறை

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


