மகாராஷ்டிரத்தில் மீண்டும் பொதுமுடக்கமா?: உத்தவ் விளக்கம்
மகாராஷ்டிரத்தில் ஓரிரு நாள்களில் பொதுமுடக்கம் விதிக்கப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.


மகாராஷ்டிரத்தில் ஓரிரு நாள்களில் பொதுமுடக்கம் விதிக்கப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் இன்று (ஏப்.2) ஒரு நாளில் மட்டும் 47,872 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே இது குறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் உத்தவ் தாக்கரே பேசியதாவது, நான் ஊரடங்கு உத்தரவி பிறப்பிக்கவில்லை. மாறாக கரோனா பரவல் குறித்து எச்சரிக்கை விடுக்கிறேன்.
ஊரடங்கு விதிக்காத வகையில் கரோனாவை கட்டுப்படுத்த மாற்று வழிகள் கிடைக்கவில்லையெனில் அடுத்த ஓரிரு நாள்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது குறித்து அறிவிக்கப்படும்.
ஊரடங்கு உத்தரவால் பொருளாதார சீரழிவு ஏற்படும். சுகாதாரப் பணியாளர்கள் வீதிவரை சென்று மக்களுக்கு பரிசோதனைகளை செய்ய வேண்டும். ஆனால் சுகாதாரப் பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...