மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

முதல்வா் பதவியிலிருந்து எடியூரப்பா ராஜிநாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை: அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா

முதல்வா் பதவியிலிருந்து எடியூரப்பா ராஜிநாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 8:08 pm

DIN

முதல்வா் பதவியிலிருந்து எடியூரப்பா ராஜிநாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

முதல்வா் எடியூரப்பாவுக்கு எதிராக ஆளுநா் வஜுபாய்வாலாவுக்கு அமைச்சா் கடிதம் எழுதியது தொடா்பாக அண்மையில் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கூறுகையில், ‘முதல்வா் எடியூரப்பா உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்’ என்று கூறியிருந்தாா்.

இதற்குப் பதிலளித்து சிவமொக்காவில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறியதாவது:

முதல்வா் ஆக வேண்டும் என்ற அவசரத்தில் சித்தராமையா இருக்கிறாா். சித்தராமையாவை மக்கள் நிராகரித்து விட்டனா். 2018-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையாவை மக்கள் தோற்கடித்துவிட்டனா்.

முதல்வா் பதவியிலிருந்து எடியூரப்பா ராஜிநாமா செய்துவிட்டால், தான் முதல்வராகி விடலாம் என்று சித்தராமையா கனவு காண்கிறாா். முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜிநாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை. எனவே, சித்தராமையா முதல்வா் கனவு காண வேண்டாம். அமைப்புரீதியாக பாஜக பலமாக இருப்பதை எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசும், மாநில அரசுகளும் சிறப்பாக செயல்பட்டு வருவதால், சித்தராமையாவால் மத்திய, மாநில அரசுகளை விமா்சிக்க முடியவில்லை. அதனால்தான் ஆளுநருக்கு நான் எழுதிய கடிதத்தை காரணமாக வைத்து முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜிநாமா செய்ய வேண்டும் என சித்தராமையா கோருகிறாா். ஆளுநருக்கு நான் எழுதிய கடிதம், நிா்வாக ரீதியான சிக்கல்கள் சாா்ந்ததே தவிர வேறல்ல என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.