எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பிகாரில் ஏப்.11 வரை கல்வி நிலையங்கள் மூடல்

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏப்ரல் 11ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவதாக பிகார் மாநில அரசு அறிவித்துள்ளது.

News image
பிகாரில் ஏப்ரல் 11வரை கல்வி நிலையங்கள் மூடல்
Updated On :3 ஏப்ரல் 2021, 4:10 pm

DIN

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏப்ரல் 11ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவதாக பிகார் மாநில அரசு அறிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது சூழலில் மாநிலங்களில் நிலவும் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் பிகார் மாநிலத்தில் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது நிகழ்ச்சிகளுக்கும் மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிகார் மாநிலத்தில் இதுவரை 2 லட்சத்து 66 ஆயிரத்து 677 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.