குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில்(ஐசியு) இருந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டார்.
இது தொடா்பாக, குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட அறிக்கையில்,
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு, தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த மாதம் 26-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவா்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர், கடந்த மார்ச் 30-ல் இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் குழு அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இதைத்தொடர்ந்து இன்று காலை தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள சிறப்பு அறைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு தான் குணமடைந்து வருவதாக கூறியதோடு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அவர் நன்றியைத் தெரிவித்தார்.
தற்போது அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்த மருத்துவர்கள், அவரை ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாம் தமிழா் கட்சிக் கொடி அவமதிப்பு: கடலூா் எஸ்.பி.யிடம் புகாா்

ஈரோடு ரயில் நிலையத்தில் 80 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு மீனவ சங்கம் நிதியுதவி

பழனியில் குழந்தைகளின் ஓவியக் கண்காட்சி
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


