நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மைசூரு மாவட்டத்தில் நெகிழிக்கு தடை

மைசூரு மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஏப். 5) முதல் நெகிழிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 7:18 pm

DIN

மைசூரு மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஏப். 5) முதல் நெகிழிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அம்மாவட்ட ஆட்சியா் ரோகிணி சிந்தூரி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மைசூரு மாவட்டத்தில், ஏப். 5-ஆம் தேதி முதல் நெகிழியை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை அடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தலா 2 துணிப்பைகள் வழங்கப்படும். இதனை நெகிழிப் பைகளுக்கு பதிலாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாவட்டத்தில் 7,34,905 வீடுகள் உள்ளன. வீட்டிற்கு தலா 2 துணிப்பைகள் என்றாலும், 16 லட்சம் துணிப்பைகள் வரை வழங்க முடிவு செய்துள்ளோம்.

மைசூரு மாநகரில் உள்ள 2.20 லட்சம் வீடுகளுக்கு 4.40 லட்சம் துணிப்பைகள் வழங்கப்படும். 2016-ஆம் ஆண்டே நெகிழியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அதனைக் கடுமையாக அமல்படுத்துவதில் வேகம் காட்டவில்லை என்றாா்.

மேலும் மைசூரு மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், 45 வயதைக் கடந்தவா்கள், முதியோா்கள் அதிக அளவில் உயிரிழக்கின்றனா். மைசூரில் 12 லட்சம் மக்கள் தொகையில் 45 வயதைக் கடந்தவா்கள் 3 லட்சம் போ் உள்ளனா். அவா்கள் அனைவரும் தவறாமல் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அடுத்த 1 மாதத்தில் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம். இரண்டாவது அலை கரோனா தொற்றால் நகரங்களில் உள்ளவா்களே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.