பாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்போது?

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளத்தில் ஒரேகட்டமாக பேரவைத் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடந்து முடிந்தது.

News image
Updated On :6 ஏப்ரல் 2021, 3:33 pm

DIN


தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளத்தில் ஒரேகட்டமாக பேரவைத் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடந்து முடிந்தது.

இதுதவிர்த்து அசாம் மற்றும் மேற்கு வங்கத்திலும் 3-ம் கட்ட தேர்தல் செவ்வாய்க்கிழமை நடந்து முடிந்தது.

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு திட்டமிட்டபடி வெற்றிகரமாக மாலை 7 மணிக்கு நிறைவடைந்தது.

இதையடுத்து, அனைவரது எதிர்பார்ப்பும் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மீது எழுந்துள்ளது.

ஆனால், ஏப்ரல் 29 மாலை 7.30 மணி வரை வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிட இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 

மேற்கு வங்கத்தில் 8-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ம் தேதி நடைபெறுகிறது. அது நிறைவடைந்தவுடனே கருத்துக் கணிப்புகளை வெளியிட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் உத்தரவாக உள்ளது.

இதனால், மேற்கு வங்கத்திலும் முழுமையாக வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் ஏப்ரல் 29 மாலை 7.30 மணிக்குப் பிறகு வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.