கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஒமர் அப்துல்லா
தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா இன்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.


தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா இன்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (ஸ்கிம்ஸ்) அவர் தடுப்பூசி முதல் டோஸை செலுத்திக்கொண்டார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இன்று காலை எனது கரோனா தடுப்பூசி முதல் டோஸை செலுத்திக்கொண்டேன். எனக்கு தடுப்பூசி போட்டதற்காக ஸ்ரீநகர் ஸ்கிம்ஸில் உள்ள அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மகன் ஒமர் அப்துல்லா இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தந்தையின் உடல்நிலை முன்னேற்றம் கண்டு வருவதாகவும் செயற்கை சுவாசக் கருவி இன்றி அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஒமர் அப்துல்லா இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...