புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நாட்டில் 9 கோடியைத் தாண்டியது கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 9 கோடியைத் தாண்டியது. 

News image
Updated On :8 ஏப்ரல் 2021, 11:41 am

DIN

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 9 கோடியைத் தாண்டியது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், உலகளாவிய பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் ஒருங்கிணைந்த போரில் இன்னுமொரு முக்கிய மைல்கல்லாக, இதுவரை வழங்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகளின் எண்ணிக்கை இன்று 9 கோடியை கடந்தது.

இந்த வருடம் ஜனவரி மாதம் 16-ம் தேதியன்று தொடங்கப்பட்ட உலகின் மாபெரும்  தடுப்பு மருந்து வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 லட்சம் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று காலை 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கையின் படி, 13,77,304 அமர்வுகளில் 9,01,98,673 தடுப்பு மருந்து டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 89,68,151 சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முதல் டோஸ் மற்றும் 54,18,084 சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டாம் டோஸ், 97,67,538 முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முதல் டோஸ், 44,11,609 முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டாம் டோஸ், 60 வயதுக்கு மேற்பட்ட 3,63,32,851 பயனாளிகளுக்கு முதல் டோஸ், 60 வயதுக்கு மேற்பட்ட 11,39,291 பயனாளிகளுக்கு இரண்டாம் டோஸ், 45 வயதுக்கு மேற்பட்ட 2,36,94,487 பயனாளிகளுக்கு முதல் டோஸ் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட 4,66,662  பயனாளிகளுக்கு இரண்டாம் டோஸ் அடங்கும்.

நாட்டில் இதுவரை வழங்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகளில் 60 சதவீதம் 8 மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையில் 82-ம் நாளன்று (2021 ஏப்ரல் 7) 29,79,292 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் 38,760 பேருக்கு முதல் டோஸும், 2,89,261 பேருக்கு இரண்டாம்  டோஸும் போடப்பட்டது.

சர்வதேச அளவில் தினமும் போடப்படும் தடுப்பூசிகளின் சராசரி விகிதத்தின் படி ஒரு நாளைக்கு 34,30,502 தடுப்பூசிகள் என்ற அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.