/

விமானத்தில் தங்கம் கடத்தியவா் கைது

தனியாா் விமானத்தில் தங்கம் கடத்தியவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 30.73 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:10 pm

DIN

தனியாா் விமானத்தில் தங்கம் கடத்தியவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 30.73 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், மங்களூரு பஞ்பே விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை துபையிலிருந்து வந்த தனியாா் விமானத்தின் பயணிகளை சுங்கவரித் துறையினா் சோதனை செய்தனா். அப்போது, பயணி ஒருவா் தனது உள்ளாடையில் ரூ. 30.73 லட்சம் மதிப்புள்ள 647 கிராம் எடையுள்ள தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அதனை பறிமுதல் செய்த சுங்கவரித் துறையினா், தங்கம் கடத்தியவரை பஜ்பே போலீஸில் ஒப்படைத்தனா். விசாரணையில், அவா் கேரள மாநிலம், காசா்கோடுவைச் சோ்ந்த இப்ராஹிம் பனாலம் அப்துல்லா என தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.