புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

ஜம்மு-காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

News image

ஜம்மு-காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

Updated On :9 ஏப்ரல் 2021, 7:52 am

ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினரும் கூட்டாக இணைந்து அப்பகுதியைச் சுற்றி வளைத்து, துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

இந்த துப்பாக்கிச்சூட்டில் வியாழக்கிழமை மாலை மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பிறகு வெள்ளிக்கிழமை காலை மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் மேலும் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

மேலும், பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.