எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கேரள வங்கியில் மேலாளர் தூக்கிட்டுத் தற்கொலை

கேரளத்தில் வங்கி மேலாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 4:09 pm

DIN

கேரளத்தில் வங்கி மேலாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
கண்ணூர் மாவட்டம், குத்துப்பரம்பா பகுதியில் உள்ள தோக்கிலங்காடி கனரா வங்கியின் கிளை மேலாளாராக பணிபுரிந்து வந்தவர் கே. ஸ்வப்னா(38). இவர் இன்று வங்கியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 
காலை 9 மணிக்கு வேலைக்கு வந்த பெண் ஊழியர் ஒருவர், மேலாளர் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக உடன் பணியாற்றியவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஸ்வப்னாவை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 
எனினும் அவர்களால் ஸ்வப்னாவை காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குத்துப்பரம்பா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
தகவல்அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் தற்கொலைக்கு முன் ஸ்வப்னா எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில், வேலை பளு காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 
இறந்த ஸ்வப்னாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் 2020ஆம் ஆண்டு குத்துப்பரம்பா பகுதியில் உள்ள கனரா வங்கி கிளையில் பணியமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.