இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 9.43 கோடியைத் தாண்டியுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
உலகளாவிய கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், முக்கிய மைல்கல்லாக கரோனா தடுப்பூசி வழங்கும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில், இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி இதுவரை
14,28,500 அமர்வுகளில் 9.43 கோடி கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
இதில் சுகாதாரப் பணியாளர்களுக்கு 89,74,511 முதல் டோஸும், 54,18,084 பேருக்கு இரண்டாவது டோஸும் வழங்கப்பட்டுள்ளது.
முன்களப் பணியாளர்களுக்கு 98,10,164 பேருக்கு முதல் டோஸும், 45,43,954 பேருக்கு இரண்டாவது டோஸும் போடப்பட்டுள்ளது.
மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2,61,03,814 (முதல் டோஸ்) மற்றும் 45 முதல் 60 வயதுடையவர்கள் 5,23,268 (இரண்டாவது டோஸ்) செலுத்தப்பட்டது.
நாட்டில் இதுவரை வழங்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகளில் 60 சதவீதம் 8 மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ளது.
தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையில் 83-ம் நாளான (ஏப்ரல் 8) 32,85,004 பயனாளிகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. இதில் 49,416 பேருக்கு முதல் டோஸும், 4,06,507 பேருக்கு இரண்டாம் டோஸும் போடப்பட்டது.
இந்தியாவில் தடுப்பூசிகளின் சராசரி விகிதத்தின் படி ஒரு நாளைக்கு 1,31,968 தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பல்லடம் பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் மதுபிரியா்கள் தொல்லை: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

தவாகவினரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்: தி.வேல்முருகன்

வாக்கு எண்ணிக்கை நாளன்று பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: தவெக கோரிக்கை
என்ஜினில் கோளாறு: ஸ்விட்சா்லாந்து புறப்பட இருந்த விமானத்தின் பயணம் ரத்து! பயணிகள் மீட்பு; 4 போ் காயம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


