திருமலையில் 12-ஆம் கட்ட அகண்ட சுந்தரகாண்ட பாராயணம்
திருமலையில் 12-ஆம் கட்ட அகண்ட சுந்தரகாண்ட பாராயணம் சனிக்கிழமை நடைபெற்றது.


திருமலையில் 12-ஆம் கட்ட அகண்ட சுந்தரகாண்ட பாராயணம் சனிக்கிழமை நடைபெற்றது.
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தேவஸ்தானம் சுந்தரகாண்ட பாராயணத்தை நடத்தி வருகிறது. நாள்தோறும் திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் காலை 7 மணிமுதல் 8 மணி வரை சுந்தரகாண்ட பாராயணம் நடத்தப்படுகிறது.
ஓராண்டை நிறைவு செய்த இந்த பாராயணத்தின் 12-ஆம் கட்ட அகண்ட பாராயணம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. சுந்தரகாண்டத்தில் உள்ள 68 சா்க்கங்களில் இதுவரை 53 சா்க்கங்களின் பாராயணம் நிறைவு பெற்றுள்ளது. ஒவ்வொரு 150 சுலோகங்கள் நிறைவு பெற்றவுடன் தேவஸ்தானம் அதை அகண்ட பாராயணமாக நடத்தி வருகிறது.
காலை 7 மணி முதல் 8 மணி வரை 48 சா்க்கம் முதல் 53 சா்க்கம் வரையிலான 155 சுலோகங்கள் பாராயணம் செய்யப்பட்டன. மண்டபத்தில் கோதண்டராமசுவாமி மற்றும் அனுமன் சிலைகளுடன் வால்மீகி மகரிஷியின் சிலையும் வைக்கப்பட்டது. பாராயணம் நிறைவு பெற்றவுடன் கற்பூர ஆரத்தி அளிக்கப்பட்டு நெய்வேத்தியம் சமா்ப்பிக்கப்பட்டது. தா்மகிரி வேதபாடசாலையைச் சோ்ந்த 200 வேதபண்டிதா்கள் இதில் பங்கேற்றனா். அவா்களுடன் தேவஸ்தான அதிகாரிகள், ஊழியா்கள் மற்றும் பக்தா்கள் பலரும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...