2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

ஏடிஎம்-இல் தீ விபத்து; ரூ. 45 லட்சம் பணம், பொருள்கள் சேதம்

ஆந்திரத்தின் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பமிடி கிராமத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம் இயந்திரத்தில் சனிக்கிழமை தீப்பிடித்தது. 

News image
கோப்புப்படம்
Updated On :11 ஏப்ரல் 2021, 3:17 am

DIN

ஆந்திரத்தின் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பமிடி கிராமத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம் இயந்திரத்தில் சனிக்கிழமை தீப்பிடித்தது. 

சனிக்கிழமை பிற்பகல் 2.31 மணியளவில் பமிடி கிராமத்தில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. 

பின்னர் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவிக்கவே, தீயணைப்புப் படையினர் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் ஏடிஎம் இயந்திரம் முழுவதும் எரிந்து சாம்பலானது. 

'தீயணைப்பு நிலையத்திலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ளது பமிடி கிராமம். சரியாக பிற்பகல் 3.14 மணிக்கு வீரர்கள் பணியில் இறங்கினர். தீயைக் கட்டுப்படுத்த சுமார் 15 நிமிடங்கள் எடுத்தன. விபத்து ஏற்பட்ட நேரத்தில் அங்கு யாரும் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு இல்லை' என்று அனந்தபுரம் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அதிகாரி அவார்த்தா தெரிவித்தார். 

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஏடிஎம்மில் எரிந்து நாசமான பணம் மற்றும் பொருள்களின் மதிப்பு ரூ. 44,59,284 என்று வங்கி அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.