மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனா: இந்தியாவில் 1.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக ஒரே நாளில் 1,52, 879 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 33 லட்சத்து 58 ஆயிரத்து 805 ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :11 ஏப்ரல் 2021, 5:43 am

DIN


புதுதில்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக ஒரே நாளில் 1,52, 879 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 33 லட்சத்து 58 ஆயிரத்து 805 ஆக அதிகரித்துள்ளது.  ஒரே நாளில் தொற்று பாதித்தவர்களில் 839 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை 1.31 லட்சம், சனிக்கிழமை 1.45 லட்சமாக தொற்று பாதிப்பு பதிவான நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 1.52 லட்சமாக உயர்ந்துள்ளது. 

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை 1.31 லட்சம், சனிக்கிழமை 1.45 லட்சமாக தொற்று பாதிப்பு பதிவான நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 1,52,879 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தற்போது தொடா்ச்சியாக 31 -ஆவது நாளாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் 11,08,087 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். 

கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 90,584 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து நாடு முழுவதும் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,20,81,443 -ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 839 போ் உடல்நிலையில் முன்னேற்றமின்றி உயிரிழந்தனா். நாட்டில் கரோனா தொற்றால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 69 ஆயிரத்து 275 ஆக அதிகரித்துள்ளது. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) தகவல்படி, கடந்த சனிக்கிழமை மட்டும் 14 லட்சத்து 12 ஆயிரத்து 047 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை, மொத்தம் 25 கோடியே 66 லட்சத்து 26 ஆயிரத்து 850 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 10,15,95,147 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35,19,987 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மகாராஷ்டிரம், தமிழகம், கேரளம், குஜராத், மத்திய பிரதேசம் உள்பட 10 மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, உயிரிழப்பு அதிகரிப்பது நாடு முழுவதும் காணப்படுகிறது.  இந்த காலகட்டத்தில் மக்கள் முகக் கவசம் அணிதல், கூட்டங்களில் இருந்து விலகி இருத்தல், நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், பரிசோதனைகள், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல், தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துதல் ஆகியவைதான் நோய்த்தொற்றை எதிா்ப்பதற்கான வழிமுறைகளை சரிவர பின்பற்றுவதில் மக்களின் பங்களிப்பு மிக முக்கியம் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.