ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனா: உலகளவில் பாதிப்பு 13.60 கோடியைத் தாண்டியது; பலி 29.39 லட்சமாக அதிகரிப்பு

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13.60 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 29.39 லட்சமாக அதிகரித்துள்ளது. 

News image
Updated On :11 ஏப்ரல் 2021, 4:01 am

DIN

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13.60 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 29.39 லட்சமாக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கடந்த ஆண்டு மேலாக உலக மக்களை துன்பத்தில் ஆழ்த்தி அச்சுறுத்தும் கரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 13,60,11,733 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 29,39,193 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 10,93,68,857 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,37,03,683 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,02,551 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,18,69,980 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 5,75,593 -ஆக உயர்ந்துள்ளது. நேற்று சனிக்கிழமை ஒரே நாளில் 85,368 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 929 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,33,55,465 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1,69,305 பேர் உயிரிழந்துள்ளனர். 

இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 1,34,45,006-ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 69,592 பேருக்கு தொற்று பாதிப்பும், 2,535 பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் பாதித்தோர் மற்றும் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 351,469 பேர் பலியாகியுள்ளனர். மூன்றாவது இடத்தில் மெக்ஸிகோ உள்ளது. அங்கு இதுவரை 2,07,020 பேர் பலியாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.