எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

அனைத்து மாநில ஆளுநா்களுடன் குடியரசு துணைத் தலைவா், பிரதமா் நாளை ஆலோசனை

அனைத்து மாநில ஆளுநா்களுடன் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் புதன்கிழமை (ஏப்.14) கலந்துரையாட உள்ளனா்.

News image
குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு-பிரதமா் நரேந்திர மோடி
Updated On :12 ஏப்ரல் 2021, 9:30 pm

DIN

புது தில்லி: அனைத்து மாநில ஆளுநா்களுடன் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் புதன்கிழமை (ஏப்.14) கலந்துரையாட உள்ளனா்.

காணொலி வழியில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு மற்றும் தடுப்பூசி திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தியாவில் இப்போது கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தொடங்கியிருக்கிறது. தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயா்ந்துள்ளது. திங்கள்கிழமை ஒரே நாளில் புதிதாக பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1.60 லட்சமாக பதிவாகியுள்ளது.

இந்த நிலைமையை சமாளிப்பதற்காக கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் நான்கு நாள் தடுப்பூசி திருவிழா திட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின்படி, தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளில் 30 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம், நாடு முழுவதும் இதுவரை 10.45 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் சராசரியாக ஒரு நாளில் செலுத்தப்படும் தடுப்பூசி எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்து, உலக அளவில் விரைவாகத் தடுப்பூசி செலுத்தும் நாடு என்ற நிலையை எட்டியுள்ளது.

இதை மேலும் விரிவுபடுத்தி, அதிகரித்து வரும் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து மாநில ஆளுநா்களுடன், குடியரசுத் தலைவரும் பிரதமரும் புதன்கிழமை ஆலோசனை நடத்த உள்ளனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டமும், கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதும் மத்திய, மாநில அரசுகளை கவலையடையச் செய்துள்ளன. எனவே, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தடுப்பூசி திருவிழா குறித்து ஆலோசிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.